மாதிரி வாக்குப்பதிவு முகாம்
திசையன்விளை அருகே மாதிரி வாக்குப்பதிவு முகாம் நடந்தது.
திசையன்விளை, மார்ச்:
திசையன்விளை அருகே உவரி சுயம்புலிங்க சுவாமி நடுநிலைப்பள்ளியில், தேர்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குச்சாவடி அமைத்து வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. தேர்தல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுப்புராயலு, வருவாய் ஆய்வாளர் துரைசாமி, கிராம நிர்வாக அலுவலர் ஜேம்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.