வங்கி ஊழியர்கள் போராட்டம்

வங்கி ஊழியர்கள் போராட்டம்;

Update: 2021-03-15 20:19 GMT
மதுரை
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டத்திலும் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனால், வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், கோடி கணக்கில் வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. மதுரை ரெயில் நிலையம் எதிரே உள்ள வங்கி முன்பு வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்