மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது

வடமதுரை அருகே மூதாட்டியிடம் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-15 20:19 GMT
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டியை சேர்ந்த வீராச்சாமி மனைவி வீரம்மாள் (வயது 75). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யலூர் வண்டிகருப்பணசாமி கோவிலில் நடந்த கிடாவெட்டு நிகழ்ச்சிக்கு சென்றார்.

 அங்கு வந்த ஒரு பெண், அவர் மீது மயக்க மருந்து ெபாடி தூவினார். இதில் மயங்கி விழுந்த வீரம்மாளிடம் இருந்து அரை பவுன் கம்மலை அந்த பெண் திருடி சென்றார். 

இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பெண்ணை தேடி வந்தனர். 

இந்த நிலையில் வீரம்மாளிடம் நகை திருடியதாக வடமதுரை அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரஞ்சித்குமார் மனைவி மணிமேகலை (28) என்பது தெரியவந்தது. 

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்