கவர்ச்சி திட்டங்களை கூறி மக்களை ஏமாற்றுகின்றன
திராவிட கட்சிகள் கவர்ச்சி திட்டங்களை கூறி மக்களை ஏமாற்றுகின்றன என்று மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் பொன்ராஜ் குற்றம் சாட்டினார்.
சிங்கம்புணரி,
வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் 120 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. நாங்கள் மூன்றாம் அணி அல்ல. முதல் அணி. திராவிட கட்சிகள் இரண்டும் மாறி, மாறி கவர்ச்சிக்கரமான அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். மக்கள் அவற்றை நம்பி ஏமாற வேண்டாம். மக்களை ஏமாற்றுவதற்காகவே கவர்ச்சி திட்டங்களை திராவிட கட்சிகள் அறிவிக்கின்றன. குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் தரும் திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பே கமல்ஹாசன் அறிவித்தார். அதை தான் இப்போது 2 திராவிட கட்சிகளும் மாறி, மாறி அறிவித்து உள்ளன. எனவே மக்கள் ஏமாற வேண்டாம். மக்கள் நீதி மய்யம் தான் இருளை நீக்கி ஒளியை கொடுக்கும். எனவே வாக்காளர்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.