நிலப்பிரச்சினையில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

தோகைமலை அருகே நிலப்பிரச்சினையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-03-15 18:42 GMT
தோகைமலை
நிலப்பிரச்சினை 
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள காக்காயன் பட்டியை சேர்ந்தவர் வீரமலை (வயது 40). கூலிதொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஆண்டியப்பன், ஜெயச்சந்திரன். இந்தநிலையில் வீரமலை குடும்பத்தினருக்கும், ஜெயச்சந்திரன் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விேராதம் இருந்து வந்தது. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் 2 குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தொடர்பாக நிலத்தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியது.  
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
இதில் ஆத்திரமடைந்த ஜெயச்சந்திரன், வீரமலையை கட்டையால் தாக்கியுள்ளார். மேலும் ஆத்திமடைந்த ஆண்டியப்பனும் வீரமலையை அரிவாளால் தலையில் வெட்டினார். இதில் காயமடைந்த வீரமலையை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வீரமலை அளித்த வாக்குமூலத்தின்பேரில், தோகைமலை போலீசார் ஆண்டியப்பன் மற்றும் ஜெயச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்