கருப்பசாமி வேடம் அணிந்தவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வந்த போதுகருப்பசாமி வேடம் அணிந்தவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.;
தேவகோட்டை,
அப்போது தேவகோட்டை திருப்பத்தூர் சாலை மோசமாக இருக்கிறது. இதற்கு என்ன தீர்வு எனக்கூறி பொதுமக்கள் கேட்டபோது தேர்தல் முடிந்த பிறகு சாலை போடப்படும் என கூறினார். கோட்டாட்சியர் அலுவலகத்தில் பா.ஜனதா வேட்பாளர் மனு தாக்கல் செய்ததால், அங்கு வந்த நாம் தமிழர் கட்சியினருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி, கருப்பசாமி வேடம் அணிந்தவரிடம் இருந்து அரிவாளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.