வாக்களிக்க வசதியாக சொந்த தொகுதியில் நியமிக்க கோரிக்கை

தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களை வாக்களிக்கும் வசதியாக சொந்த ெதாகுதியில் நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-03-15 18:19 GMT
ிவகங்கை,

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தேர்தல் ஆணையத்திற்கும் மாவட்ட தேர்தல் அலுவலருக்கும் அனுப்பியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்த உள்ளனர்.  தேர்தல் நடக்கவிருக்கும் முதல் நாள் அன்றுதான் வாக்குச்சாவடிக்கான பணியாணை வழங்குவதால் பணியாற்றும் வாக்குச்சாவடியை கண்டறிந்து பணிக்கு செல்வது மிகவும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. இதனால் தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பலர் வாக்களிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
இது தேர்தல் ஆணையத்தின் 100 சதவீத வாக்களிப்பு நோக்கத்தை நிறைவேற்ற தடைகல்லாக உள்ளது.  எனவே ஆசிரியர்கள் பணியாற்றும் ஒன்றியங்களை மட்டும் மாற்றி வாக்குரிமை உள்ள சட்டமன்றத் தொகுதியிலேயே பணியமர்த்தினால் தங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பணிச்சான்றினை வைத்து தங்கள் பணியாற்றும் வாக்குச்சாவடி மையங்களிலேயே தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வாக்களிக்க முடியும். இதனால் தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களின் வாக்களிக்கும் உரிமை பாதுகாக்கப்படுவதோடு தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தையும் நிறைவேற்ற முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



மேலும் செய்திகள்