பல்லடம் அருகே சாலையில் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பல்லடம் அருகே சாலையில் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே சாலையில் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மாணவி பலி
பல்லடம் அருகே கல்லம்பாளையம் பகுதியில் சாலையோரம் உள்ள ஒரு வீட்டின் முற்றத்தில் 12-ந் தேதி விளையாடிக்கொண்டிருந்த மாணவி சாருகாசினி (வயது 10) மீது அந்த வழியாக வேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அந்த மாணவி பலியானாள். இந்த விபத்தை அடுத்து பல்லடம் போலீசார் அந்த பகுதியில் சாலை தடுப்பு வைத்தனர். இந்த நிலையில் 13-ந் தேதி மாலை அதே இடத்தில் மோட்டார் சைக்கிளும்- சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
இதனால் அந்த சாலையில் நிரந்தர வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக கல்லம்பாளையத்தில் நிரந்தர வேகத்தடை அமைக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று போலீசார் வைத்திருந்த சாலை தடுப்பு மீது வாலிபர் ஒருவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த பகுதியில் இன்னும் வேகத்தடை அமைக்கவில்லை. இதனால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகிறது என்று கூறி. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100 பேர் பல்லடம் - மங்கலம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீ ராமச்சந்திரன், நெடுஞ்சாலைத்துறை, உதவி பொறியாளர் அருண் கார்த்திக், உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம், வேகத்தடை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் பல்லடம் - மங்கலம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.