உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.88 ஆயிரம் பறிமுதல்

கீழ்வேளூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.88 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-15 17:06 GMT
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.88 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 
வாகன சோதனை 
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை மே 2-ந்தேதி நடக்கிறது. தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா திருவாரூர் -நாகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அத்திப்புலியூர் அய்யனார் கோவில் அருகில் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரியும், துணை தாசில்தாருமான திலகா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ரூ.88 ஆயிரம் பறிமுதல் 
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் வந்த வேளாங்கண்ணியில் மோட்டார் கம்பெனி நடத்தி வரும் நாகை அருகே கீழ அந்தணப்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்த ரெத்தினவிகாஸ் (32) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 88 ஆயிரத்து 800 இருந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து ரெத்தினவிகாசிடம் இருந்து ரூ.88 ஆயிரத்து 800-யை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கீழ்வேளுர் தாசில்தார் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மாரிமுத்துவிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சார்நிலை கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்