விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விழுப்புரம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் சுபாஷ் (வயது 25), கட்டிட தொழிலாளி. இவர் தினமும் மது அருந்தும் பழக்கம் உடையவர். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவர் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.
இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.