சங்கராபுரத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி கலெக்டர் கிரண்குராலா ஆய்வு

சங்கராபுரத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி கலெக்டர் கிரண்குராலா ஆய்வு

Update: 2021-03-15 16:47 GMT
சங்கராபுரம்

சங்கராபுரம் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி வாக்குசாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆகியோருக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம் ஆகியவற்றை கையாள்வது குறித்த பயிற்சி சங்கராபுரத்தில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் நடைபெற்றது. இதை கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரண்குராலா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போதுதேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராஜவேல், ராஜாமணி, மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சையத் காதர், சத்யநாராயணன், பாண்டியன், ராஜராஜன், குடிமை பொருள் தாசில்தார் பாண்டியன், தேர்தல் துணை தாசில்தார் பசுபதி, மண்டல துணை தாசில்தார் மாரியாபிள்ளை ஆகியோர் உடன் இருந்தனர். 
பயிற்சியில் சங்கராபுரம் தொகுதி வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் 1,698 பேர், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் 1,633 பேர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்