பஸ் மோதி தொழிலாளி சாவு

செஞ்சி அருகே பஸ் மோதி தொழிலாளி உயிாிழந்தாா்.

Update: 2021-03-15 16:46 GMT
செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கண்டாச்சிபுரம் அருகே உள்ள வீரங்கிபுரத்தை சேர்ந்தவர்  ஜெயராமன் மகன் தயாளன் (வயது 52). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது மொபட்டில் துத்திப்பட்டு - பொன்னங்குப்பம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த அரசு பஸ் ஒன்று மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தயாளன் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு சிகிச்சை பலனின்றி  அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி உமா கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்