மாசி களரி திருவிழா

முதுகுளத்தூர் பகுதியில் மாசி களரி திருவிழா நடந்தது.

Update: 2021-03-15 15:54 GMT
முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் குலதெய்வ கோவில்களில் மாசி களரி சிறப்பு பூஜை நடந்தது. முதுகுளத்தூர் அருகே பூங்குளத்து அய்யனார் கோவில், கிழவனேரி அய்யனார், சித்திரங்குடி சீலக்காரி அம்மன், பொசுக்குடி வரதராஜபெருமாள், இளஞ்செம்பூர் நிறைகுளத்து அய்யனார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜைகள் கிடா பலியிடுதல் தீபாராதனை நடந்தது.இதில் பொதுமக்கள் நேர்த்திக்கடனாக பொங்கல் வைத்து வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் குலதெய்வ கோவிலுக்கு வந்து வழிபட்டனர். சாக்குளம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட கிடாக்களை பலியிட்டு அதனை சமைத்து சுற்றியுள்ள கிராம பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்