ராஜமரிக்கோவிலில் மாசி களரி திருவிழா

ராஜமரிக்கோவிலில் மாசி களரி திருவிழா நடந்தது.;

Update: 2021-03-15 15:20 GMT
பனைக்குளம், 
மண்டபம் யூனியன் பனைக்குளத்தில் பிரசித்தி பெற்ற நூற்றாண்டுகளை தாண்டிய ராஜமரிக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் அங்காள பரமேசுவரி அம்மன், வீரபத்திரசாமி, இருளப்ப சாமி, கருப்பண சாமி, குருநாதர், முனியசாமி, கோவிந்தசுவாமி, ராக்கச்சி, பேச்சி, ராஜராஜேசுவரி, பத்ரகாளியம்மன், சங்கிலி கருப்பன் மற்றும் பரிவார தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில்  மாசி களரி மற்றும் பாரிவேட்டை உற்சவ விழா, சிவராத்திரி விழா,  மாசி களரி விழா நடைபெற்றது. 
இதில் அங்காள பரமேசுவரி அம்மனுக்கு கரகம் எடுத்தல் நிகழ்ச்சியும், பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் வழிபாடு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பாரிவேட்டையுடன் கொடியிறக்கம் நடைபெற்றது. விழாவில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக தலைவர் அங்குச்சாமி, செயலாளர் சவுந்திரராஜன், பொருளாளர் தனபாலன் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்