கொள்ளிடம் அருகே பெட்டிக்கடையில் தீ விபத்து ரூ.2 லட்சம் பொருட்கள் நாசம்
கொள்ளிடம் அருகே பெட்டிக்கடையில் தீ விபத்து ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம் அடைந்தது.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகேந்திரப்பள்ளி ஊராட்சி பாவுசுபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தினகரன் (வயது45). இவர் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
இன்று இவருடைய கடையில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி தீயணைப்பு படை வீரர்கள் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் அங்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.
இதன் மதிப்பு ரூ 2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.