கயத்தாறில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

கயத்தாறில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;

Update: 2021-03-15 12:48 GMT
கயத்தாறு:
கயத்தாறில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. தாலுகா அலுவலகத்தில் இருந்து இந்த பேரணியை கயத்தாறு தாசில்தார் பேச்சிமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். கயத்தாறு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகள் மற்றும் மதுரை மெயின் ரோடு, ஆஸ்பத்திரி சாலை, விமான சாலை காந்தாரி அம்மன் கோவில் சாலை, கோட்டை பிள்ளையார் கோவில் சாலை ஆகிய சாலை வழியாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் அங்கன்வாடி பணியாளர்கள் தாலுகா அலுவலக பணியாளர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, கையில் அட்டைகளை ஏந்தி கொண்டு நூறு சதவீத வாக்களிக்க கோரி கோஷங்களை எழுப்பி துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்,  அவருடன் வட்டார குழந்தைகள் நல அலுவலர் தாஜூதீன் நிஷா பேகம், வட்ட வழங்கல் தாசில்தார் கருப்பசாமி, வருவாய் ஆய்வாளர் தேர்தல் பிரிவு முத்துக்கணி, கயத்தாறு வருவாய் ஆய்வாளர் காசிராஜன் கயத்தாறு கிராம நிர்வாக அலுவலர்கலைச்செல்வி, கிராம உதவியாளர்கள் அழகர்சாமி கொம்பையா ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்