திருவெறும்பூர் தொகுதியில் கணேசபுரம் பகுதியில் மக்கள் நீதிமய்ய வேட்பாளர் வீடு, வீடாக சென்று வாக்குசேகரிப்பு
மக்கள் நீதி மய்யம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பொறியாளர் எம்.முருகானந்தம் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து, தனது சொந்தபகுதியான கணேசபுரம், கீழ குமரேசபுரம் மற்றும் மேல குமரேசபுரம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக நடந்து சென்று டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அவருடன் மாவட்ட துணைச் செயலாளர் வி.ஆனந்தகுமார், மாவட்ட பொருளாளர் வக்கீல் சுவாமிநாதன், நற்பணிமாவட்ட செயலாளர் ஜானி பாஷா, மண்டலச்செயலாளர் அய்யனார், நகர செயலாளர் மலை ஆனந்தன், கிளை செயலாளர்கள் மற்றும் கிளை செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்கள். அப்போது பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.