சேலத்தில் வாலிபர் மீது தாக்குதல்; ரவுடி உள்பட 3 பேர் கைது

ரவுடி உள்பட 3 பேர் கைது

Update: 2021-03-15 00:29 GMT
சேலம்:
சேலம் அன்னதானப்பட்டி அல்லிக்குட்டை காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் பார்த்திபன் (வயது 19). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே அல்லிக்குட்டி சாமியார் தெருவை சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் (28) மற்றும் அவரது கூட்டாளிகள் தமிழ்செல்வன் (25), வசந்த் (23), அங்கமுத்து ஆகியோர் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் பார்த்திபனுடன் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கினர். இதில், படுகாயம் அடைந்த பார்த்திபன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, பார்த்திபனை தாக்கியதாக ரவுடி சுரேஷ், தமிழ்செல்வன், வசந்த் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான அங்கமுத்துவை வலைவீசி தேடி வருகின்றனர். ரவுடி சுரேஷ் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்பட 3 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்