கோவையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ஒரே வாரத்தில் ரூ.3 லட்சம் அபராதம்

கோவையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கடந்த ஒரு வாரத்தில் ரூ.3 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-03-14 22:55 GMT
கோவை

கோவையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கடந்த ஒரு வாரத்தில் ரூ.3 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.

அபராதம்

கோவை மாநகராட்சி பகுதியில் முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

இதன்படி நேற்று முன்தினம் கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் வலம் வந்த பொதுமக்கள், கடைகளில் முகக்கவசம் இன்றி பணிபுரிந்த ஊழியர்கள் என மொத்தம் 87 பேருக்கு ரூ.17 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை தெற்கு மண்டலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத ஒரு கடைக்கு ரூ.500 அபராதமாக விதிக்கப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கிருமிநாசினி தெளிப்பு

கடந்த ஆண்டு கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக செல்வபுரம், பீளமேடு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக காணப்பட்டது.

 பின்னர் மாநகராட்சியில் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் இந்த கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 3 மாதங்களாக மாநகராட்சி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி எதுவும் இல்லாமல் இருந்து வந்தது. 

இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று அதிமுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.

 கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளை தனிமைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். கடந்த ஒரு வாரத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகள், நிறுவனங்களுக்கு கடந்த ஒரு வாரத்தில் ரூ.3 லட்சம் வரை அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்