கோத்தகிரி
கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதும் ஆகும். இந்த கோவிலில் சதுர்த்தி, பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் மாசி மாத அமாவாசை நாளான நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக பூஜையும், அதனைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த பூஜையில் மகளிர் வழிபாட்டு குழுவினர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.