விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி

விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி

Update: 2021-03-14 20:34 GMT
மேலூர்
மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்து மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். நெற்பயிரிடும் விவசாயிகள் அறுவடைக்குப் பின்னர் மிஞ்சிய சிறிதளவு வைக்கோலை பயன்படுத்தி புரதம் மற்றும் நார்ச்சத்து கணிசமான அளவில் உள்ள சிப்பி காளான் வளர்த்து இருமடங்கு வருவாய் பெற முடியும் என மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். வேளாண்மைக்கல்லூரி மாணவர்களான சிசின்ரவி, சுபாஷ், தமிழ்மணி, தருண், சத்ரியா வசந்தகுமார், ராஜமோகன் ஆகியோர் காளான் வளர்ப்பில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

மேலும் செய்திகள்