மின்கம்பி திருட்டு

மின்கம்பி திருட்டு

Update: 2021-03-14 20:33 GMT
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை பகுதியில் மின்தடை ஏற்பட்டது. அது பற்றி அந்த பகுதியில் மின்வாரிய வயர்மேன் ஆய்வு செய்தார். அப்போது விவசாய மின் இணைப்புகளுக்கு இடையே 1,062 மீட்டர் மின் கம்பிகள் திருட்டு போனது தெரியவந்தது. அதை யாரோ திருடி சென்று விட்டனர். அதன் மதிப்பு ரூ.34,290 ஆகும். இது சம்பந்தமாக மின்வாரிய உதவிமின் பொறியாளர் கீர்த்திகா கொடுத்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்