கடம்பூர் அருகே தண்ணீர் தேடி அலையும் ஒற்றை யானை

கடம்பூா் அருகே தண்ணீர் தேடி ஒற்றை யானை அலைந்து வருகிறது.

Update: 2021-03-14 20:26 GMT
டி.என்.பாளையம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், தாளவாடி, கேர்மாளம், தலமலை, டி.என்.பாளையம், ஜீர்கள்ளி, விளாமுண்டி, கடம்பூர் ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் கடம்பூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட குன்றி வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. தற்போது இந்த வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள குட்டைகள், நீர்நிலைகள் வறண்டு விட்டன. இதன்காரணமாக தண்ணீர் தேடி யானைகள் அங்கும் இங்குமாக அலைகின்றன. 
இந்த நிலையில் கடம்பூரில் இருந்து குன்றி செல்லும் சாலையில் மாமரத்துப்பள்ளம் என்ற இடத்தில் நேற்று யானை ஒன்று தண்ணீர் தேடி அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து கொண்டிருந்தது. 
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘குன்றி வனப்பகுதியில் வறட்சி காரணமாக யானைகள் தண்ணீர் தேடி அலைகின்றன. எனவே யானைகளின் தாகத்தை தீர்க்கும் வகையில், வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் தண்ணீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். 

மேலும் செய்திகள்