வாகனம் மோதி டிரைவர் பலி

வாகனம் மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-03-14 20:12 GMT
பாடாலூர்:
சென்னையை சேர்ந்தவர் சங்கர்(வயது 44). டிரைவரான இவர் நேற்று சென்னையில் இருந்து- திருச்சி நோக்கி செல்லும் சாலையில் லாரியை ஓட்டி வந்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் காரை பிரிவு ரோட்டில் வந்தபோது, லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு அருகே உள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கினார். பின்னர் அவர் லாரியை நோக்கி வந்தபோது, எதிரே வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் ரோந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்