கடையநல்லூரில் போலீசார், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
கடையநல்லூரில் போலீசார், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.
அச்சன்புதூர்:
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி கடையநல்லூரில் போலீசார், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.
புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி பஸ்நிறுத்தத்தில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு கடையநல்லூர், மேலக்கடையநல்லூர், கிருஷ்ணாபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று தாலுகா அலுவலகத்தை வந்தடைந்தது.
அணிவகுப்பில் சேர்ந்தமரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு, கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் கோமதிநாதன் மற்றும் போலீசார், துணை ராணுவத்தினர் கலந்து கொண்டனர்.