சந்திமறித்தம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவிலில் ஆண்டு தோறும் திருவிளக்கு பூஜை நடத்தப்படும். இந்த ஆண்டு 33-வது திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றினார்கள்.
அவர்கள் சங்கரன்கோவில் ரோடு, மதுரை ரோடு மற்றும் கோவில் மேற்கு பகுதியில் வரிசையாக அமர்ந்து பூஜை நடத்தினர். மேலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.