சிவகாசி,
திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கே.கே.நகர் பகுதியில் குடியிருப்பு அதிகம் உள்ள இடத்தில் அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் (வயது 32) என்பவர் பட்டாசுகளை தயார் செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து வெடி மருந்து மற்றும் அட்டை குழாய்களை பறிமுதல் செய்தனர்.