வாசுதேவநல்லூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருக்கு வரவேற்பு

வாசுதேவநல்லூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2021-03-14 19:42 GMT
வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக மனோகரன் எம்.எல்.ஏ. மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் சென்னையில் இருந்து வாசுதேவநல்லூர் வருகை தந்த வேட்பாளர் மனோகரனுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து சமுதாய தலைவர்களும் மேளதாளத்துடன், பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்குள்ள காமராஜர், முத்துராமலிங்கதேவர், அம்பேத்கர், இம்மானுவேல் சேகரன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்