திருமணமான 10 மாதத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

திருமணமான 10 மாதத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Update: 2021-03-14 19:41 GMT
அரக்கோணம்

அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டையை சேர்ந்தவர் சங்கர் (வயது 32). இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக வாடகைக்கு வீடு எடுத்து மனைவியுடன் வசித்து வந்தார். இவரது மனைவி அவ்வப்போது செல்போனில் பேசுவதை சங்கர் கண்டித்துள்ளார். அதற்கு அவர் நான் அப்படித்தான் பேசுவேன் என்று கூறியுள்ளார்.

இதனால் விரக்தியடைந்த சங்கர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்