நாங்குநேரியில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது

நாங்குநேரியில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது

Update: 2021-03-14 19:32 GMT
நாங்குநேரி:

நாங்குநேரி- நெல்லை நான்கு வழிச்சாலையில் தனியார் நூற்பாலை அருகில் உள்ள பாலத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர். 

விசாரணையில், இறந்து கிடந்தவர் நாகர்கோவிலைச் சேர்ந்த முருகன் மகன் விக்னேஸ்வரன் (வயது 35) என்பது தெரியவந்தது. கடந்த 2   மாதங்களுக்கு முன்பு தனது தாய் இறந்த விட்டதாகவும், வேலை இல்லாமலும் இருந்து வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த  விக்னேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் செய்திகள்