பழனி திருஆவினன்குடி கோவிலில் யாக பூஜை
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி திருஆவினன்குடி கோவிலில் யாக பூஜை நடந்தது.
பழனி:
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவை முன்னிட்டு, நேற்று திருஆவினன்குடி கோவிலில் சாந்தி ஹோம யாக பூஜை தொடங்கியது. முன்னதாக நான்கு திசைகளிலும் கலசங்கள் வைத்து கலசபூஜை நடந்தது.
தொடர்ந்து இந்த ஹோமம் இன்றும் (திங்கட்கிழமை) உச்சிக்கால பூஜையில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் சண்முகவடிவு உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜை நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணிய குருக்கள் ஆகியோர் செய்தனர்.