சமத்துவ மக்கள் கட்சி மாநில இணை செயலாளர் அ.தி.மு.க.வில் இணைந்தார்

சமத்துவ மக்கள் கட்சி மாநில இணை செயலாளர் அ.தி.மு.க.வில் இணைந்தார்

Update: 2021-03-14 19:16 GMT
திருப்பத்தூர்,

சமத்துவ மக்கள் கட்சியின் மாநில இணைச்செயலாளர் பிரான்சிஸ் அந்தோணிராஜ் மற்றும் மாநில துணை செயலாளர் அழகு உள்ளிட்டவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று காலை திருப்பத்தூரில் அ.தி.மு.க. கழக செய்தி தொடர்பாளரும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளருமான மருது அழகுராஜை சந்தித்து தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.
 இதேபோல் திருப்பத்தூர் தி.மு.க. முன்னாள் ஒன்றிய துணை செயலாளரும், காரையூர் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவருமான ரவிச்சந்திரன் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட அவைத்தலைவர் ஏ.வி.நாகராஜன், மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் சிதம்பரம், ஒன்றிய செயலாளர் வடிவேலு, நகர செயலாளர் இப்ராம்ஷா, முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் பத்மநாபன், ஆத்தங்கரைபட்டி ஆறு முகம் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.


மேலும் செய்திகள்