நெல்லையில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு கோலம்

நெல்லையில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு கோலம் வரையப்பட்டது.;

Update: 2021-03-14 19:03 GMT
நெல்லை:
நெல்லையில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு கோலம் வரையப்பட்டது.

சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோலம் போடுதல், மாதிரி வாக்குச்சாவடி அமைத்தல் கிராமங்களுக்கு வாகனங்களில் சென்று வாக்குப்பதிவு செய்வது எப்படி என்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

விழிப்புணர்வு கோலம்

இந்த நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அத்தப்பூ கோலம் வரையும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நேதாஜி, விவேகானந்தர், பாரதியார் உள்ளிட்ட தலைவர்களின் வேடங்களை அணிந்து பள்ளி மாணவ-மாணவிகள் அணிவகுத்து வந்து 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தாசில்தார் லட்சுமி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் ரெயில் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்