பென்னாத்தூர் அருகே ரூ.54 ஆயிரம் சிகரெட் பண்டல்கள் பறிமுதல்

பென்னாத்தூர் அருகே ரூ.54 ஆயிரம் சிகரெட் பண்டல்கள் பறிமுதல்.

Update: 2021-03-14 19:00 GMT
அடுக்கம்பாறை,

அணைக்கட்டு எப்.எஸ்.டி. 2-வது பறக்கும் படை குழு அதிகாரி லோகராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று பென்னாத்தூரை அடுத்த ஆவாரம்பாளையம் கிராமத்தில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது மலைக்கோடியில் இருந்து பென்னாத்தூரை நோக்கி மோட்டார்சைக்கிளில் பார்சல் பெட்டியுடன் வந்தவரை மடக்கி சோதனை செய்தனர்.

பெட்டியில் உரிய ஆவணமின்றி ரூ.54 ஆயிரம் மதிப்பிலான 1,200 சிகரெட் பண்டல்களை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்து, அணைக்கட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கட்ராமன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்