கல்லல் அருகே உள்ள சொக்கநாதபுரம் மகா உக்ர பிரத்யங்கிரா தேவி கோவிலில் மாசி மாத அமாவாசையைெயாட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், கொடிய நோய் கொரோனா ஒழியவும் யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தை அய்யப்பன் சுவாமிகள் நடத்தினர். பின்னர் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூைஜயும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.