தளவாய்புரம்,
தளவாய்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தளவாய்புரம் பி.கே.எஸ். திருமண மண்டபத்தில் நேற்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கருணாகர பிரபு தலைமை தாங்கினார். முகாமில் பஞ்சாயத்து உறுப்பினர்கள், துப்புரவு பணியாளர்கள், பள்ளி நிர்வாகிகள் என மொத்தம் 220 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் தளவாய்புரம் டாக்டர் உதயன் வில்லி ஆழ்வார், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.