சேந்தமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள்- கார் மோதல்; கட்டிட மேஸ்திரி பலி

சேந்தமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள், கார் மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி பலியானார்.

Update: 2021-03-14 18:20 GMT
சேந்தமங்கலம்,

சேந்தமங்கலம் பேரூராட்சி 7-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 35). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் நாமக்கல் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். 
அப்போது சேந்தமங்கலம் அருகே முத்துகாப்பட்டியில் வந்தபோது முன்னால் சென்ற பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது எதிர் திசையில் வந்த காரும், ஜெயக்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. 

விசாரணை

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஜெயக்குமாரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிேசாதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த விபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான ஜெயக்குமாருக்கு பிருந்தா (28) என்ற மனைவி உள்ளார்.

மேலும் செய்திகள்