பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் திடீர் தீ விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம் பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2021-03-14 17:11 GMT
விழுப்புரம், 

விழுப்புரத்தில் சென்னை நெடுஞ்சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் மரக்கட்டைகள் மற்றும் பழயை பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த பொருட்கள் நேற்று இரவு 8 மணிக்கு திடீரென தீ பிடித்து எரிந்தது. 

தகவல் அறிந்த விழுப்புரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.  தீ விபத்துக்கான காரணம் குறித்து விழுப்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்