மணல் அள்ளிய 2 பேர் கைது

மணல் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-03-14 16:29 GMT
சாயல்குடி, 
 சாயல்குடி போலீசார் மலட்டாறு ஆற்றுப் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது பூப்பாண்டியபுரம் ஆற்றுப்படுகையில ்டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்த இருவேலி கிராமத்தைச் சேர்ந்த அப்துல் வகாப், எஸ்.வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் கருப்பசாமி, சண்முக குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோபால் ஆகியோர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அப்போது  கோபாலை பிடித்து சாயல்குடி சப்-இன்ஸ்பெக்டர்  சரவணன் கைது செய்ததுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர். அதேபோல் அதே பகுதியில் மாட்டுவண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த சாயல்குடி மாதவன் நகரை சேர்ந்த அஜய்குமாரை கைது செய்த சாயல்குடி போலீசார் அவரது மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்