மொரப்பூரில் தேக்கு மர தோப்பில் திடீர் தீ
மொரப்பூரில் தேக்கு மர தோப்பில் திடீர் தீ ஏற்பட்டது.;
மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ரெயில்வே நிலைய குடியிருப்பில் உள்ள தேக்கு மர தோப்பில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த தீ விபத்தில் தேக்குமரங்கள் கருகின.