வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி
வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
தொண்டி,
திருவாடானை சட்டமன்ற தொகுதி அளவிலான 417 வாக்குப்பதிவு மைய அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் திருவாடானை அருகே உள்ள சி.கே. மங்கலம் கைகாட்டியில் புனித பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட வழங்கல் அலுவலரும் திருவாடானை தொகுதி தேர்தல் அலுவலருமான மரகத நாதன் தொடங்கி வைத்தார். திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன், தாசில்தார் முருகவேல் ஆகியோர்முன்னிலை வகித்தனர். 34 அரங்குகளில் நடைபெற்ற பயிற்சியில் தேர்தல் மண்டல அலுவலர்கள், உதவி அலுவலர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் செயல்பாடுகள் குறித்தும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு தொடங்கும் முன்பு அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு எவ்வாறு நடத்துவது என்றும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் செய்வது பதிவேடுகள் பராமரித்தல் போன்ற பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டது. தொடர்ந்து வாக்குப்பதிவு அலுவலர்களின் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் பதில் அளித்தனர். பின்னர் இதுதொடர்பாக வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டன. இதில் 1200-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயக்குமார், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் ரவி, ராமசுப்பு, தலைமையிடத்து துணை தாசில்தார் ஜஸ்டின் பெர்னாண்டோ மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.