தூத்துக்குடியில் மது விற்ற 48 பேர் கைது
தூத்துக்குடியில் மது விற்ற 48 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுகிறதா என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மது விற்பனை செய்தாக 31 போலீஸ் நிலையங்களில் 48 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 339 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.7 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.