தேர்தலை புறக்கணிப்பதாக கூறி மலைக்கிராம மக்கள் போராட்டம்
பெரியகுளம் அருகே தேர்தலை புறக்கணிப்பதாக கூறி மலைக்கிராம மக்கள் போராட்டம்
பெரியகுளம்:
போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகமலை ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு, குறவன்குழலி, கருங்கல் பாறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் சாலை வசதி செய்யப்பட வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மலைக்கிராமமக்கள் நேற்று பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை பகுதிக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் தங்கள் ரேஷன் கார்டுகளை சாலையில் போட்டு தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் சாலை வசதி செய்து தரவேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.