கயத்தாறில் துணைராணுவத்தினர், போலீசார் கொடிஅணிவகுப்பு
கயத்தாறில் துணை ராணுவத்தினரும், போலீசாரும் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர்.
கயத்தாறு:
கயத்தாறில் வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் கயத்தாறில் கொடிஅணிவகுப்பு நடந்தது. இதில் துணை ராணுவ வீரர்கள், போலீசார் அணிவகுத்து சென்றனர். கயத்தாறிலுள்ள அனைத்து வீதிகள் வழியாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதில் கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அரிக்கண்ணன், முருகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.