கயத்தாறில் புதிய வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வினியோகம்
கயத்தாறில் புதிய வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வினியோகம் செய்யப்பட்டது.
கயத்தாறு:
கயத்தாறில் நகரபஞ்சாயத்து அலுவலகம் மற்றும் ஆர்.சி. உயர்நிலைப்பள்ளி, ஜவகர்லால் நடுநிலை பள்ளி உள்பட 9 இடங்களில் நேற்று புதிய வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வினியோகம் செய்யப்பட்டது. ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கும், நேரடியாக மனுக்கள் கொடுத்தவர்களுக்கும் பரிசீலனை முடிக்கப்பட்டு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது.