திருச்செந்தூர், நெல்லை அரசு பஸ்சில் துப்புரவு பணியாளர் தவறவிட்ட ரூ.5ஆயிரம் மீட்பு குரும்பூர் போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு

திருச்செந்தூர், நெல்லை அரசு பஸ்சில் துப்புரவு பணியாளர் தவறவிட்ட ரூ.5 ஆயிரத்தை குரும்பூர் போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டு ஒப்படைத்தனர். இதில் துரிதமாக செயல்பட்ட குரும்பூர் போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

Update: 2021-03-14 11:22 GMT
தென்திருப்பேரை:
திருச்செந்தூர், நெல்லை அரசு பஸ்சில் துப்புரவு பணியாளர் தவறவிட்ட ரூ.5 ஆயிரத்தை குரும்பூர் போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டு ஒப்படைத்தனர். இதில் துரிதமாக செயல்பட்ட குரும்பூர் போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
துப்புரவு பணியாளர்
குரும்பூர் அருகேயுள்ள நாலுமாவடி சாமிநகரை சேர்ந்தவர் தேவராஜ் மனைவி பஞ்சவர்ணகிளி. இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் துப்பரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று துப்பரவு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. இவர் தனது மாத சம்பளத்தில் இருந்து ரூ.5 ஆயிரத்தை ஏ.டி.எம். எந்திரத்தில் எடுத்துள்ளார். அந்த பணத்தை ஒரு பர்ஸில் கார்டுடன் வைத்து ஒரு கூடையில் வைத்துள்ளர். 
ரூ.5 ஆயிரம் மாயம்
பணி முடிந்து இரவு 8 மணியவில் வீடு திருப்புவதற்காக நெல்லை செல்லும் அரசு பஸ்சில் ஏறி குரும்பூர் பஸ் நிலையம் வந்து இறங்கினார். அப்போது தனது கூடையில் வைத்திருந்த பர்சை பார்த்தபோது, அது மாயமாகி இருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் குரும்பூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ்,  எழுத்தர் லட்சுமணன் ஆகியோரிடம் புகார் தெரிவித்தார். 
இதை தொடர்ந்து குரும்பூர் போலீசார் அவர் பயணித்த பஸ் செல்லும் ஆழ்வார்திருநகரி,  ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் போலீஸ் நிலைய சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பணம் மீட்பு
அதற்குள் அந்த பஸ் செய்துங்கநல்லூர் சோதனைச்சாவடி அருகே சென்றுவிட்டது. உடனடியாக செய்துங்கநல்லூர் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், அந்த பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனையிட்டார். அப்போது துப்புரவு பணியாளர் பஞ்சவர்ணக்கிளி  பஸ்ஸில் தவறவிட்ட ரூ.5 ஆயிரம் மற்றும் அவரது ஏ.டி.எம். கார்டு அடங்கிய பர்ைச அவர் பத்திரமாக மீட்டார்.
பொதுமக்கள் பாராட்டு
உடனடியாக அவை குரும்பூர் போலீஸ் நிலையத்துக்கு கொடுத்து அனுப்பப்பட்டது. சிறிது நேரத்தில் துப்புரவு பணியாளரிடம் அவை ஒப்படைக்கப்பட்டது. தான் தவறவிட்ட சம்பள பணத்தை மீட்டுக் ெகாடுத்த போலீசாருக்கு ஆனந்த கண்ணீருடன் நன்றியை தெரிவித்து கொண்டார். துரிதமாக செயல்பட்டு துப்புரவு பணியாளரிடம் சம்பள பணத்தை மீட்டு ஒப்படைத்ததற்கு, குரும்பூர் போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்