மேட்டூர் சட்டசபை தொகுதியில் தி.மு.க.-பா.ம.க. இடையே நேரடி போட்டி

மேட்டூர் சட்டசபை தொகுதியில் தி.மு.க.-பா.ம.க. இடையே நேரடியாக களம் காண்கிறது.

Update: 2021-03-14 11:20 GMT
மேச்சேரி,

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் முக்கியமான தொகுதிகளில் ஒன்று சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் ஆகும். டெல்டா மாவட்டங்களுக்கு முக்கிய நீர்ஆதாரமான மேட்டூர் அணை இந்த தொகுதியில் தான் உள்ளது என்பது சிறப்புக்குரியதாகும். இந்த தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தி.மு.க. நேரடியாக களம் காண்கிறது. 

இதன் மூலம் இந்த தொகுதியில் தி.மு.க.-பா.ம.க. இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் தி.மு.க. சார்பில் மேச்சேரி ஒன்றிய பொறுப்பாளர் சீனிவாசப்பெருமாள் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் சதாசிவம் போட்டியிடுகிறார். இதன் மூலம் மேட்டூர் தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

மேலும் செய்திகள்