80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் 10 ஆயிரம் பேர் உள்ளனர்

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு சட்டசபைத் தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2021-03-14 02:22 GMT
தேர்தல்
கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தலைமையில் பொதுமக்களிடம் 100சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தேர்தல் நடத்தும்அலுவலர் கூறுகையில்


கிணத்துக்கடவு சட்டசபைத் தொகுதியில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 148 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 955 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் 42 பேரும் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 24 ஆயிரத்து 145 வாக்காளர்கள் உள்ளனர். 

இதில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 7,500 பேரும் மாற்றுத்திறனாளிகள் 2,500 பேரும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரம் பேர் உள்ளனர். 

இவர்கள் தபால் ஓட்டு போடுவதற்கு 12 டி விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு, பின்னர் அவைகள் பூர்த்தி செய்யப்பட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர் இடம் கொடுக்கப்படுகிறது என்றார்.

மேலும் செய்திகள்