பென்னாகரம் தொகுதியை பா.ம.க.வுக்கு ஒதுக்கியதை கண்டித்து பாப்பாரப்பட்டியில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
பென்னாகரம் தொகுதியை பா.ம.க.வுக்கு ஒதுக்கியதை கண்டித்து பாப்பாரப்பட்டியில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாப்பாரப்பட்டி,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் அந்த கட்சியின் தலைவர் ஜி.கே.மணி போட்டியிடுகிறார். இதை கண்டித்து பென்னாகரத்தில் அ.தி.மு.க.வினர் கடந்த சில நாட்களாக சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பென்னாகரம் தொகுதியை பா.ம.க.வுக்கு ஒதுக்கியதை கண்டித்தும், அ.தி.மு.க.வுக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அ.தி.மு.க.வினர் நேற்று பாப்பாரப்பட்டி எம்.ஜி.ஆர். சிலை அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.