பால்குட விழா

கல்லல் அருேக சேவுகப்பெருமாள் அய்யனார் தொட்டியத்து கருப்பர் கோவிலில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு பால்குட விழா நடைபெற்றது.

Update: 2021-03-13 21:26 GMT
கல்லல்,

கல்லல் அருகே கத்தப்பட்டு சொக்கநாதபுரத்தில் சேவுகப்பெருமாள் அய்யனார் தொட்டியத்து கருப்பர் கோவிலில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு பால்குட விழாவும் காவடி எடுத்தலும் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், சந்தன குடம், காவடி எடுத்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் குழந்தை இல்லாதவர்கள் குழந்தைக்காக நேர்த்திக்கடனாக குழந்தை பிறந்த பின் பட்டுச் சேலைகளில் கரும்பில் தொட்டில் கட்டி கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.பால்குட விழாவை முன்னிட்டு தொட்டியத்து கருப்பர் சேவுகபெருமாள் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டது.திருவிழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும் செய்திகள்